'ஹிந்துக்களை குறிவைக்கிறவர்களிடம் எதிர்ப்பை காட்டுவது ஒவ்வொரு ஹிந்துவுக்கும் பொறுப்பாகும்'; பவன் கல்யாண்..! - Seithipunal
Seithipunal


ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அமராவதியில் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், 'அனைவரும் ஹிந்துக்கள் மீதே குறி வைக்கிறார்கள்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அனைவரும் ஹிந்துக்களை குறிவைக்கிறார்கள் என்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களின் மரபுகளை கேள்வி கேட்கிறார்கள், அவர்களிடம் எதிர்ப்பை காட்டுவது ஒவ்வொரு ஹிந்துவுக்கும் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற  மதுரைக் கிளை நீதிபதி 'ஹிந்து சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும்' தீர்ப்பை வழங்கிய பிறகு, பாராளுமன்றத்தில், 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நீதிபதி மீதான கண்டன தீர்மானத்திற்கு மனு தாக்கல் செய்தனர்.

ஆனால், சபரிமலை கோவில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, ஹிந்துக்கள் சட்டப்படி போராடினார்களே தவிர, நீதிபதிகள் மீது கண்டனத் தீர்மானம் கோரவில்லை என்றும் பவன் கல்யாண் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pawan Kalyan says it is the responsibility of every Hindu to show resistance against those who target Hindus


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->