பரபரப்புக்கு மத்தியில் ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத் தொடர்.!!
parliment monsoon session begins today
பரபரப்பான அரசியல் சூழளுக்கு மத்தியில் இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது. இந்தத்தொடர், ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. இந்தத் கூட்டத்தொடரில் மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டு 12 முதல் 18-ம் தேதி வரை பாராளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமான பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதேபோன்று, எதிர்க்கட்சிகளும் பல முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை நிறுத்தியதற்கான உரிமை கோரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பவுள்ளன.
English Summary
parliment monsoon session begins today