தொடர் அமளியில் எதிர்க்கட்சிகள் - மாநிலங்களவை ஒத்திவைப்பு.!!
parliment meeting stop for opposition parties turmoil
கடந்த 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்ததனால், கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது.
அதேசமயம், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டதையடுத்து அது குறித்த விவாதம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் மக்களவையில் உரையாற்றினர்.
இந்த நிலையில், வழக்கம் போல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடியது. இதில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றி வருகிறார்.
அப்போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து விவாதிக்கக்கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் நிராகரித்ததனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
English Summary
parliment meeting stop for opposition parties turmoil