குஜராத் : இறந்த காதல் ஜோடியின் சிலைக்கு திருமணம் செய்து வைத்த அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உயிரிழந்த காதலர்களின் சிலைக்கு 6 மாதங்களுக்குப் பிறகு, குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

குஜராத் மாநிலத்தில் உள்ள தாபி பகுதியில், கணேஷ் மற்றும் ரஞ்சனா என்ற காதல் ஜோடியின் திருமணத்திற்கு அவர்களது குடும்பத்தினர்கள் சம்மதம் தெரிவிக்காததால், இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். 

இந்நிலையில் அவர்கள் இருவரும் உயிருடன் இருந்த போது சேர்ந்து வாழ முடியாமல் போனதற்கு காரணம் தாங்கள் தான் என்று நினைத்து மனம் வருந்திய குடும்பத்தினர் தற்போது அவர்களுக்கு சிலைகளை உருவாக்கி அதற்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். 

இது தொடர்பாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்ததாவது, "இருவரும் ஒருவரையொருவர் நேசித்ததை நாங்கள் பார்த்தோம். அவர்களது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும் இதைச் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parent married get to lovers statue in gujarat


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->