காஷ்மீர் : இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது.! - Seithipunal
Seithipunal


இந்திய எல்லைக்குள் அத்துமீறி ந்த பாகிஸ்தான் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு காஷ்மீர் அருகே ராணுவத்தினர் நேற்று இரவு வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சக்ரா டி பக் என்ற பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைவதை பாதுகாப்பு படையினர் கவனித்தனர்.

துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை கைது செய்த ராணுவத்தினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மாவட்டம் ஃப்ரேஷ்பண்டா பகுதியை சேர்ந்த ரோசினா (வயது 49) என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பெண் ரோசினா விசாரணைக்கு பிறகு பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistani woman arrested for trespassing into Indian territory


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->