போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்: ஸ்ரீநகரில் பயங்கர வெடிச்சத்தம்; காஷ்மீர் முதல்வர் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் இன்று மாலை 05 மணி முதல் அமலுக்கு வந்து. ஆனால், அதனை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதலை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாகவும், உதம்பூரில் பாகிஸ்தான் டீரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன், ஜம்மு செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும், ஜம்மு, உதம்பூர், அக்னூர், நெளஷேரா, ராஜௌரி, ஆர்.எஸ்.புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களிலும் வெடிச் சத்தம் கேட்டதை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்," போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன ஆனது? ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களிலும் வெடிச் சத்தம் கேட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மீண்டும் நாட்டில் பெர்ம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan violates ceasefire Huge explosion in Srinagar Kashmir Chief Minister condemns


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->