சந்தடி சாக்கில் பாகிஸ்தானை பதம் பார்க்கும் பலுசிஸ்தான்!
Pakistan Balochistan war
இந்தியாவின் கிழக்குப்புற தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் மேற்குப் பகுதியில் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களால் இருபுற நெருக்கடியில் சிக்கியுள்ளது.
தனிக்காட்சி நாடு ஒன்றை உருவாக்கக் கோரும் "பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்" (BLA), நாட்டின் உள்நிலையைக் கலங்கடிக்க இந்தியாவின் தாக்குதலை சாதகமாக பயன்படுத்தி, தொடர்ந்து தாக்குதல்களை தீவிரமாக்கி வருகிறது. குவெட்டா உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் உள்ள இராணுவத் தளங்களை கைப்பற்றியதாக BLA தெரிவித்துள்ளது.
அண்மையில், கெச், மஸ்துங் மற்றும் கச்சி மாவட்டங்களில் ரிமோட் கண்ட்ரோல் IEDகள், தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் கையெறிகள் பயன்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் இராணுவம், அதன் விநியோகச் சங்கிலி மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் இலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக BLA செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலோச் தெரிவித்துள்ளார்.
இந்த உள்நாட்டு எழுச்சி பாகிஸ்தானின் பாதுகாப்பு சூழலை மேலும் சீர்குலைத்து, அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.