காஷ்மீர் : தீவிர தேடுதலில் சிக்கிய வெடிபொருட்கள்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் எல்லாப்பகுதியான காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டம் ஊரியில் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி நடப்பதாகவும், ஏராளமான ஆயுதங்களை குவிப்பதற்கு முயல்வதாகவும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்தது. 

அந்த தகவலின் படி, பாதுகாப்பு படையினர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பல திடீர் தாக்குதல்களையும், தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ராணுவத்தினர் ஊரி ஹத்லங்கா பகுதியில் தேடுதலில் ஈடுபட்டப்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கண்டுபிடித்து கைப்பற்றினர். 

அந்த பொருட்கள் குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "8 ஏ.கே.74, 24 ஏ.கே.74 துப்பாக்கி தோட்டா கொள்கலன்கள், 560 ஏ.கே.74 தோட்டாக்கள், பன்னிரண்டு சீன கைத்துப்பாக்கிகள், இருபத்து நான்கு சீன கைத்துப்பாக்கி தோட்டா கொள்கலன்கள், 244 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், ஒன்பது சீன கையெறிகுண்டுகள், ஐந்து பாகிஸ்தான் கையெறிகுண்டுகள், 'ஐ லவ் பாகிஸ்தான்' என்று பொறிக்கப்பட்ட 81 பலூன்கள், பாகிஸ்தான் பெயருடன் ஐந்து செயற்கை இழை சாக்குப்பைகள் உள்ளிட்டவை அடங்கும்.

'சமீபத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையும், அவர்களின் ஆயுதம் மற்றும் வெடிபொருட்களின் இருப்பும் வெகுவாக குறைந்துள்ளன. இருப்பினும், இந்தியப் பகுதிக்குள் ஊடுருவவும், ஆயுதங்களை கடத்தவும் பயங்கரவாதிகள் தீவிரமாக உள்ளனர். 

ஆனால் இந்திய பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பினால், அவர்கள் ஆயுதங்களை அப்படியே விட்டுவிட்டு தங்கள் பகுதிக்கு திரும்பி சென்றிருக்கலாம்" என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த ஆண்டு நடத்தப்பட்ட 8 தேடுதல் நடவடிக்கைகளில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஊரி பகுதியில் அதிகளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakishthan arms and ammunition recovered in kashmeer


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->