வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் ஜன.5ல் சோழர்களுக்கான மாநாடு..!! - Seithipunal
Seithipunal


வெளிநாடுகளில் வசிக்கும் உலகத் தமிழர்கள் சார்பில் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் பற்றியும் இந்தியாவைத் தாண்டி மலேசியா வரை வரை ஆட்சி செய்த சோழர்களை பற்றியும் உலகத் தமிழர்கள் தெரிந்து கொள்வதற்காக வரும் டிசம்பர் 5ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அகண்ட தமிழ் உலகம் அமைப்பு மற்றும் டெல்லி பாரத் பாரதி ஆகியவை இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். 

இந்த மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிசியஸ் என உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து பல நூற்றாண்டுகளாக வாழும் தமிழர்கள் கலந்து கொள்ள உள்ளனர். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்திஸ்ரீ, தமிழக பாஜக துணை தலைவர் கனகசபாபதி, சாதிக்க அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரமான ராஜேந்திரன் உள்ளிட்ட பங்கேற்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து பிரகாசி பாரதிய திவாஸ் எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு வரும் ஜன.8, 9, 10 ஆகிய தேதிகளில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் வருகை தர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Overseas tamils conduct a conference for cholas on jan5


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->