1.137 கிலோ போதை பொருள் பறிமுதல் - மணிப்பூர் போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


வட மாநிலமான அசாமில் போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கையை முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தீவிரப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அசாம் மற்றும் மணிப்பூர் எல்லை பகுதியில் போதை பொருள் கடத்தலை தடுப்பதற்காக அசாம் ரைபிள் படையினர், மணிப்பூர் போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், எல்லை பகுதிகளில் போதை பொருள் கடத்தல் தொடர்கிறது என்று உளவு தகவல் வந்ததையடுத்து, மணிப்பூர் போலீசாருடன் இணைந்து அசாம் ரைபிள் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு நபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அதில், அவரிடமிருந்து 1.137 கிலோ எடை கொண்ட டபிள்யூ.ஒய். வகையை சேர்ந்த போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்த போலீசார் சம்பவம் குறித்து பேசியதாவது:- "அசாம் மற்றும் மணிப்பூர் எல்லை பகுதியருகே நடந்த சோதனையின்போது, நபர் ஒருவரிடம் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றின் மதிப்பு ரூ.1.5 கோடி இருக்கும். பிடிபட்ட அந்நபர் பின்னர் ஜிரிபம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one kg gold seized in manipur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->