நாட்டில் 110 யூடியூப் செய்தி சேனல்களுக்குத் தடை.!  - Seithipunal
Seithipunal


மக்களவையில் நாட்டில் இறையாண்மைக்கு எதிராக தகவல்களைத் தெரிவிக்கும் யூடியூப் சேனல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.

அதில், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள் மற்றும் 248 இணையதள முகவரி உள்ளிட்டவைகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து, மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அனுராக் தாகூர் தெரிவித்ததாவது, "பத்திரிகை தகவல் அலுவலகத்தின், உண்மையை சரிபார்க்கும் பிரிவு, 1160 செய்திகள் பொய்யானவை என்று கண்டுபிடித்துள்ளது. 

இந்தப் பிரிவு மக்கள் அனுப்பும் கேள்விகள் அடிப்படையிலும், தாமாக முன்வந்தும் செய்திகளின் உண்மைத்தன்மையை பரிசோதனை செய்கிறது" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

one hundrad and ten you tube news channals ban in india minister anurock tahoor submit


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->