இந்தியாவிற்கு மூன்று ||| கோடு போட்ட ஒமைக்ரான் வைரஸ்.! பீதியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 77 நாடுகளில் பரவி உள்ளது. 

இந்தியாவில், ஒமைக்ரான் வைரஸ் முதலாவதாக கடந்த டிசம்பர் 3ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு சர்வதேச விமான பயணிகளுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை ரிஸ்ட் நாடுகள் என வகைப்படுத்தி, அந்த நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகள் விமான நிலையத்திலேயே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்தியாவில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா - 40, ராஜஸ்தான் - 17, டெல்லி - 22, குஜராத் - 5, ஆந்திரா - 1, சண்டிகர் - 1, கேரளா - 5, கர்நாடகா - 8, தமிழ்நாடு - 1, தெலங்கானா - 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இந்தியாவில் ஒமைக்ரான் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் ஒவ்வொரு மாநில அரசு  தங்கள் மாநிலத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

omicron positive increased


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->