Breaking : நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கைது செய்தது தொடர்பாக விளக்கம் அளித்தது என்ஐஏ! - Seithipunal
Seithipunal


விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு! ஆதாரங்கள் சிக்கியதாக என்ஐஏ விளக்கம்!

தடை செய்யப்பட்ட இயக்கங்களும் தொடர்புடையதாக சந்தேகித்து தமிழகத்தில் நேற்று ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. சிவகங்கை மற்றும் சேலம் ஓமலூர் பகுதிகளில் சோதனை நடத்தினர்.

 சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியான விக்னேஸ்வரன் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவருக்கு தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்று வந்ததாகவும் அங்கு தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்தான தகவல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் மூன்று பேர் நேற்று சோதனை நடத்தினர்.

இதேபோன்று சேலம் மாவட்டம் அடுத்த ஓமலூர் அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் துப்பாக்கி கத்தி முகமூடி உள்ளிட்ட பொருட்களுடன் வந்த இரண்டு வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சேலம் மாநகரைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி சஞ்சய் பிரகாஷ் என்பது தெரியவந்தது இருவரும் சேலம் செட்டி சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து யூட்டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்கள் கத்தி முகமூடி சில துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நேற்று அவர் வாடகை இருந்த வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை தொடர்பான அறிக்கையினை என்ஐஏ வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் " 07-10-2022 அன்று என்ஐஏ சேலம் மற்றும் சிவகங்கை பகுதியில் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட நபர்கள் சம்பந்தமான இரு இடங்களில் சோதனை செய்தனர். தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் மற்றும் வணிகம் சார்ந்த இடங்களில் தாக்குதல் நடத்தும் நோக்கில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்க முயற்சி மேற்கொண்டு உள்ளனர். 

இது சம்பந்தமான வழக்கு ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த 19-05-2022 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 25-07-2022 அன்று என்ஐஏக்கு மாற்றப்பட்டது. இந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட பொருட்கள் விடுதலைப்புலிகள் சம்பந்தமான புத்தகம், சிடி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் மற்ற தலைவர்களின் புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் துப்பாக்கி மற்றும் வெடி பொருட்கள் தயாரிக்க மற்றும் விஷம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் வாங்கிய ஆவணங்களும் ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மூவர் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது" என என்ஐஏ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK members Contact with the LTTE movement and NIA explains that evidence is trapped


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->