குட்கா பாக்கு கேட்டு நண்பரை கொலை செய்த வாலிபர் - பெங்களூரில் சோகம்..!!
noth indian youth murder in bangalur
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அருகே ராமகொண்டனஹள்ளி பகுதியில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் கட்டிட பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியில் பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி தொழிலாளர்கள் ஹிதேந்திரா, சீதாராம் ஆகியோர் வீட்டில் மது குடித்துள்ளனர்.
அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சீதாராம், வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து ஹிதேந்திராவை சரமாரியாக தாக்கினார். இந்தத் தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சீதாராம் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் சம்பவம் குறித்து அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து ஹிதேந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று சீதாராமை கைது செய்தனர். பின்னர் அவரிடம் சம்பவம் குறித்து விசாரித்தபோது, ஹிதேந்திரா, சீதாராமிடம் விமலா எனப்படும் குட்கா பாக்கை கேட்டுள்ளாா்.
இதற்கு அவர் மறுத்ததனால் குடிபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சீதாராம், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து ஹிதேந்திராவை சரமாரியாக தாக்கி கொன்றது தெரியவந்தது. ஒரு குட்கா பாக்கிற்காக தன்னுடன் வேலை செய்த ஊழியரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
noth indian youth murder in bangalur