தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் - இந்தியா வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
North East Monsoon
வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று, இந்தியா வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வழக்கமாக பெய்யக்கூடிய வடகிழக்கு பருவமழை, இந்த வருடம் இயல்பை விட 112 சதவீதம் அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறிப்பாக தென்னிந்திய பகுதிகள் இந்த மழை அதிக அளவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகம், கேரளா, தெற்கு உள் கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்று இரவு 7 மணிவரை தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தக்க சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, கரூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.