நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது...! பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசுவாரா?
NITI Aayog meeting has begun Will Chief Minister MK Stalin speak to Prime Minister Modi
இன்று டெல்லியில் நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது.இது பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

மேலும், மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
குறிப்பாக இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் நரேந்திரமோடியிடம், மு.க. ஸ்டாலின் நேரடியாக வலியுறுத்த இருக்கிறார்.
இதேபோல், பிற மாநில முதல்-மந்திரிகளும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்க இருக்கின்றனர்.இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், இமாசல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
NITI Aayog meeting has begun Will Chief Minister MK Stalin speak to Prime Minister Modi