தவெக தலைவர் விஜய் வீட்டில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் திடீர் ஆய்வு.!!
crbf officers inspection in tvk leader vijay house
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்புத் தொடர்பாக மத்திய ரிசர்வ் காவல் படையின் உயர் அதிகாரிகள் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் திடீரென ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு செய்வதற்காக நொய்டாவில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமையகத்தில் இருந்து டி.ஐ.ஜி. சஞ்சய்குமார், பெங்களூரு சி.ஆர்.பி.எப். கமாண்டன்ட் மனோஜ் குமார் ஆகியோர் வந்தனர்.

அவர்கள், விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'ஒய்' பிரிவு பாதுகாப்பு ஏற்பாடுகளின் தரம் மற்றும் அவரது வீட்டைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்தனர். சுமார் 15 நிமிடங்கள் ஆய்வுக்கு பிறகு, உயர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
crbf officers inspection in tvk leader vijay house