தமிழகத்தில் போதைப்பொருள் தலைவிரித்தாடுகிறது - நிர்மலா சீதாராமன் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சிதம்பரம் தொகுதியின் எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாளவன் பேசுகையில், “இந்திய ஒன்றிய அரசு போதைப்பொருளையும், சாராயத்தையும் முழுமையாக நீக்குவதற்கு, விலக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருள் என்பது இங்கொன்றும், அங்கொன்றுமாக இல்லை. 

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிக தாராளமாக புழக்கத்தில் உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. இது நாட்டுக்கு அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம். இளைஞர்களுக்கு செய்கிற துரோகம். எனவே, தேசிய மதுவிலக்கிற்கு அரசு ஒரு கொள்கையை கொண்டு வந்து இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.

இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- ”இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். போதை பொருள் நடமாட்டம் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் அவரது கவலையை பகிர்ந்து இருப்பதை நான் வரவேற்கிறேன். 

ஆனால், அவரது கட்சி கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. அங்கு, 56 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இதனால் நீங்கள் முதலில் அறிவுரைகளை தமிழ்நாட்டுக்கு சொல்ல வேண்டும். அங்கு முதலில் பேச வேண்டும். போதைப்பொருள் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. 

இதனைத் தவிர என்னால் எதுவும் சொல்ல முடியாது” என்றுத் தெரிவித்தார். நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் லோக்சபாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nirmala seetharaman answer vck leader thirumavalavan speech


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->