வாசனை திரவியம் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - 9 பேர் மாயம்.! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள, சோலன் மாவட்டம், ஜார் மஜ்ரி பகுதியில், வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று மதியம் எதிர்பாராதவிதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில், ஆலையில் பணிபுரிந்த 85 பேர் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், தொழிற்சாலைகளில் சிக்கியவர்களில் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது:- “தீ விபத்தில் சிக்கி காணாமல் போனதாகக் கூறப்படும் ஒன்பது பேரை தேடி வருகிறோம். தீ விபத்து நடந்த நேரத்தில் தொழிற்சாலையில் 85 பேர் இருந்தனர். 

அவர்களில் முப்பது பேர் காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் இறந்துவிட்டார். மீதமுள்ளவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை தற்போது தொழிற்சாலையின் பாதுகாப்பை மதிப்பீடு செய்து வருகிறது. 

மேலும், அங்குள்ள கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு போன்ற அபாயகரமான வாயுக்களை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றுத் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nine peoples missing in perfume factory fire accident in himachal pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->