பாகிஸ்தானுக்கு உளவு வேலை: எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை..!
NIA raids 15 places in eight states in connection with spying for Pakistan case
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த வழக்கில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எட்டு மாநிலங்களில் உள்ள 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை திடீர் சோதனைகளை நடத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, டெல்லி, மகாராஷ்டிரா (மும்பை), அரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் உளவு முகவர்களுடன் (பி.ஐ.ஓ) தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திடீர் சோதனைகளை நடத்தியுள்ளது.

குறித்த சோதனைகளின் போது, மின்னணு சாதனங்கள், முக்கியமான நிதி ஆவணங்கள் மற்றும் பிற குற்றச்சாட்டுக்கு ஆதாரமான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தம் எட்டு மாநிலங்களில் உள்ள 15 இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டதில், பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த நபர்களின் முக்கிய விபரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 20-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் பின்னணியில் இந்த சோதனைகள் நடந்துள்ளன. மேலும், கடந்த 2023 முதல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு முகவர்களுக்கு அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றது.
English Summary
NIA raids 15 places in eight states in connection with spying for Pakistan case