கேரளாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல்.. 85 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சலால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக காய்ச்சல் உடல் வலி கை கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உட்பட பல அறிகுறிகளுடன் 5 வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நிலைமை குறித்து கண்காணித்து வருகின்றனர்.

கொல்லம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளையும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New virus affected Kerala 85 children admitted hospital


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->