#JustIn : புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள்.. டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம்.! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்த்து 34 நீதிபதிகள் செயல்பட வேண்டும். ஆனால் சில காலத்திற்கு 27 நீதிபதிகள் மட்டுமே இதில் செயல்பட்டு வந்தனர் இதனை தொடர்ந்து காலியாக இருக்கும் நீதிமன்ற பணியிடங்களை நிரப்புவது பற்றி கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட்டின் தலைமையில் நடந்த கொலிஜியம் குழு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை முடிவில் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பங்கஜ் மிட்டால், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அஸானுதீன் அமானுல்லா, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா போன்ற 5 நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. 

அதன்படி இந்த 5 நீதிபதிகளின் பெயர்களும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பின், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், இன்று புதிதாக நியமிக்கப்பட்ட இந்த ஐந்து நீதிபதிகளும் காலை பதவியேற்றனர். 

இவர்களுக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலமாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையானது தற்போது மீண்டும் 32 ஆக அதிகரித்துள்ளது. மீதம் 2 இடங்கள் மட்டும்தான் காலியாக இருக்கின்றது. உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட 5 புதிய நீதிபதிகளில் மூன்று பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள். மீதம்இருக்கும் இருவர் உயர்நீதிமன்ற நீதிபதிகள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Supreme court judges Appointed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->