1-ஆம் வகுப்பில் சேர்வதற்கு இது ரொம்ப கட்டாயம் - மத்திய அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2020 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்தக் கல்விக் கொள்கையை சில மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. பிற மாநிலங்களில் மாநிலக் கல்விக் கொள்கையே நடைமுறையில் இருக்கிறது. 

இந்த நிலையில் வருகின்ற 2024-25 கல்வியாண்டில் குழந்தைகள் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கு 6 வயது கட்டாயம் நிரம்பி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.

அதில், தேசிய கல்விக் கொள்கை மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளின் அடிப்படை கல்வியை வலுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கையின் படி 3-8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அடிப்படைக் கல்விக்கு தகுதியானவர்கள். ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகள் கட்டாயம் ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new rules to 1st class admission


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->