07 பேர் கொண்ட புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றி அமைப்பு..!
New National Security Advisory Council consisting of 07 members has been restructured
காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசனை அமைப்பை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இது தொடர்பில் இன்று டில்லியில் மத்திய அமைச்சரவை குழுவிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனை அமைப்பை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. குறித்த தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள் 07 பேரைக் கொண்ட புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில், முன்னாள் மேற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல், முன்னாள் தெற்கு ராணுவ தளபதி ஏ.கே. சிங், ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
English Summary
New National Security Advisory Council consisting of 07 members has been restructured