இனிமேல் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆப்பு: தடை விதிக்கும் புதிய மசோதா தாக்கல்..!
New bill to ban online gambling introduced
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஆன்லைனில் பணம் வைத்து நடத்தப்படும் விளையாட்டுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை தடுக்கும் நோக்கில் இந்த மசோதா தக்கல் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை தற்போது புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த புதிய மசோதாவின் படி ஆன்லைன் மூலம் பணம் வைத்து விளையாடும் சேவையை வழங்குவோருக்கும் இதற்கான பரிவர்த்தனை வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனகளுக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
அதாவது, பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை விளம்பரம் செய்வோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்த தேசிய ஆன்லைன் விளையாட்டு ஆணையம் உருவாக்கப்படும் என்றும் புதிய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
New bill to ban online gambling introduced