இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் இணைய சேவை முடக்கம் அதிகரிப்பு.!!
network shutdown increase in india at three years
இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் இணைய சேவை முடக்கம் அதிகரிப்பு.!!
இந்தியாவில், ‘இணைய சுதந்திர சம்மேளனம்’ மற்றும் ‘மனித உரிமை கண்காணிப்பு’ அமைப்புகள் உள்ளிட்டவை இணைந்து ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"நாடு முழுவதும் பேராட்டங்கள், இன மோதல்களின் போது வதந்திகள் பரவுவதை தடுப்பதற்கும், பள்ளி, கல்லூரி தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்கும், அரசு பணி நியமனங்களுக்கான தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்கும், வன்முறைகள் மற்றும் மற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின் போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும் இணைய சேவை முடக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில், 18 மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஒரு முறையாவது இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களின் போது உள்ளூர் நிர்வாகத்தினர் 54 முறை இணைய சேவையை முடக்கி உள்ளனர்.
அதேபோல் பள்ளி மற்றும் அரசு தேர்வுகளின் போது 37 முறை இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜாதி மோதல்களின் போது 18 முறையும் வேறு பிற சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக 18 முறையும் நாட்டின் பல மாநிலங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக 85 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அங்கு அமைதியை நிலைநாட்ட அடிக்கடி இணைய சேவை முடக்கப்பட்டு வருகிறது. இணையதள சேவை முடக்கம் தொடர்பாக மத்திய அரசு எந்தெந்த மாநிலங்களில் எத்தனை முறை இணையம் முடக்கப்படுகிறது என்ற புள்ளி விவரங்களை சேகரிப்பதில்லை.
பல நேரங்களில் தேவை இல்லாமலும் இணைய சேவை முடக்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன. மேலும் இணையம் முடக்கப்பட்ட பிறகும் கூட, மக்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை" என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
network shutdown increase in india at three years