'நேபாளத்தில் அமைதி, இந்தியாவுக்கு மிகவும் முக்கியம்'. இளைஞர்கள் அமைதியை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. 'ஜென் Z' போராட்டம் என்ற பெயரில் இந்த புரட்சி போராட்டம் நடந்து வருகிறது. 

இந்த போராட்டங்களில் நேற்று 19 பேர் கொல்லப்பட்ட நிலையில்,  மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அங்கு சமூக வலைத்தளங்களுக்கான தடையை நீக்கிய பின்பும் போராட்டங்கள் வன்முறை சம்பவங்களாக எல்லாம் மீறி போயுள்ளன. இதன் தொடர்ச்சியாக அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள், நாடாளுமண்ட கட்டிடங்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, இன்று பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 'ஜென் Z' போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவகலங்கள், அமைச்சர்களின் வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்தத்தில் காட்மாண்டுவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி வீட்டில் இருந்த நிலையில் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

அங்கு கட்டுக்கடங்காத வன்முறை நீடித்து வரும் நிலையில்,  இதன் ஒரு கட்டமாக அங்குள்ள சிறைச்சாலையை இளைஞர்கள் உடைத்து கைதிகளை விடுவித்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 02 ஆயிரம் கைதிகள் முதல் கட்டமாக வெளியேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு மேலும் கேள்வி குறியாகியுள்ளது.

இந்நிலையில், நேபாளத்தில் அமைதி திரும்பவுது முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  கூறுகையில், “ நேபாளத்தில் அமைதி, ஸ்திரதன்மை, செழிப்பு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இளம் வயதினர் பலர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது. அமைதியை கடைபிடிக்குமாறு நேபாளத்தில் உள்ள  சகோதர சகோதரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nepals peace is important PM Modi urges youth to maintain peace


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->