அப்பாடா! நீட் தேர்வு ஒரே நேரத்தில் நடக்க உத்தரவு...! - உச்சநீதிமன்றம்
NEET exam to be held simultaneously Supreme Court
வருகிற ஜூன் 15 -ம் தேதி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ''நீட் தேர்வு''( NEET EXAM ) நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு ஆன்-லைன்( ONLINE ) மூலம் நடத்தப்பட இருக்கிறது.

இந்தத் தேர்வை 2 முறையாக (two shifts) அதாவது காலை மற்றும் மாலை என 2 முறை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுபோன்று, 2 முறை நடத்தப்பட்டால் சிலருக்கு எளிதாகவும், சிலருக்கு கடினமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
இதனால் உச்சநீதிமன்றத்தில், ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வு ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், எந்த 2 வினாத்தாள்களும் ஒரே மாதிரியான சிரமம் அல்லது எளிமையைக் கொண்டவை என்று ஒருபோதும் தெரிவிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
English Summary
NEET exam to be held simultaneously Supreme Court