உ.பி : தெருவில் சுற்றும் மாடுகளை பள்ளியில் கட்டிப்போட்ட விவசாயிகள்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்டத்தில் உள்ள ரசுல்பூர் கலம், கரினா பனி, அஸ்லாபுர், அசுரா, ஹுண்டா மஜ்ரா, ஹஸ்ரத்புர், அபிஹன் உள்ளிட்ட  கிராமங்களில் பெருமளவில் ஆதரவற்ற மாடுகள் சுற்றித்திரிகின்றன. 

இவ்வாறு தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் நெல் உள்பட விவசாய பயிர்களை நாசம் செய்வதாகவும், அவற்றை கோசாலையில் அடைக்கும்படியும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை விடுத்தனர். 

இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருவதால், ஆத்திரமடைந்த விவசாயிகள் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அந்த பகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் அடைத்து வைத்தனர். 

இதையறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து பள்ளிகளில் அடைக்கப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்துவிட்டனர். அதன் பின்னர், தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை கோசாலை அமைத்து அங்கு கட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near uttar pradesh farmers lock road stray cows in govt school


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->