திருவள்ளூர் || படிக்கட்டில் தொங்கியபடி பயணம்.! காலை இழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் மகன் மணவாளநகர் நடேசன் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி மாலை பள்ளி முடிந்ததும் அரசு மாநகர பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது, அந்த மாணவன் பேருந்து கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். பேருந்து அரண்வாயல் பகுதியில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது படியில் தொங்கிய மாணவன் தவறி முன் மற்றும் பின்பக்க சக்கரத்திற்கு இடையில் விழுந்துள்ளர்.

இதில், அந்த மாணவனின் வலது காலில் பின் சக்கரம் ஏறி இறங்கியதால் கால் முறிந்தது. அதன் பின்னர் அந்த மாணவனுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டப் பிறகு சென்னை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் குறித்து மாணவனின் தாயார்அளித்த புகாரின பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் பேருந்து டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி நேரத்தில் போதுமான பேருந்து இல்லாததே இந்த விபத்துக்கு காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near thirvallur school student accident in bus


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->