சத்தீஸ்கர் : வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை இந்தியாவில் பல மாநிலங்களில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டது முதல் சுமார் நான்கு முறை விபத்துக்குள்ளானது. இந்த விபத்து கால்நடைகளின் மீது வந்தே பரத் ரெயில் மோதியதால் ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் முன் பக்கம் சேதம் அடைந்ததால் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. 

இந்த விபத்தில் கால்நடைகள் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் குஜராத் மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் ரயில் நான்கு முறை கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று ஐந்தாவது முறையாக சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் பிலாய் நகர் ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ரெயில் மீது கல்லை வீசியுள்ளனர். இதனால், ரெயிலில் உள்ள ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. 

இதில் ரெயிலில் உள்ள யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விவிசாரணை செய்து வருகின்றனர். நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே செல்லும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near satheeskar Mysterious people attack vanthe barath train


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->