டியூசனுக்கு சென்ற மாணவனை பலாத்காரம் செய்த ஆசிரியை.! போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் டியூசன் படிக்க சென்ற மாணவனை ஆசிரியை பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய முழு விவரம் வருமாறு:- 

"திருச்சூர் அருகே மண்ணுத்தி பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன், கடந்த சில நாட்களாக சோர்வாக இருந்துள்ளான். அதேபோல் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வுகளிலும் அவன் குறைந்த மதிப்பெண்களே எடுத்துள்ளான். 

அதுமட்டுமல்லாமல், சக மாணவர்களுடன் பழகாமல் ஒதுங்கியே இருந்த மாணவனின் நடவடிக்கையில் ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த அவனை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து விசாரணை செய்தனர். அப்போது அந்த மாணவன் தெரிவித்ததாவது, 

"கடந்த சில நாட்களாக நான், ஒரு ஆசிரியையிடம் டியூசனுக்கு சென்றேன். அங்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை, தனக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று தெரிவித்தான். மாணவன் சொன்ன பதில் ஆசிரியர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து மண்ணுத்தி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியையை கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near kerala teacher arrest sexually harassment case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->