கர்நாடகா : மங்களூரில் படுகொலை - இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரு நகரில் உள்ள ஒரு கடையின் முன்பு நேற்றிரவு ஜலீல் என்பவர் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் அவரை திடீரென கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். 

இதனால் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவதினால், மங்களூருவுக்கு உட்பட்ட சூரத்கல், பாஜ்பே, காவூர் மற்றும் பனம்பூர் இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருகிற 27-ந்தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மங்களூர் சுற்றியுள்ள பகுதியில் வேறு எந்தவிதமான வன்முறையும் பரவ விடாமல் இருப்பதற்காக இந்த உத்தரவை நகர கமிஷனர் பிறப்பித்துள்ளார். இதேபோல், வருகிற 27-ந்தேதி காலை 10 மணிவரை மதுபான விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataka mangalur murder case two days 144 restraining


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->