பீகார் : தேசிய கோடியை ஏற்றும்போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி - நன்கு பேர் படுகாயம்.!
near bihar man died for electric shock on flagpole
நேற்று நாடு முழுவதும் குடியரசுதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் பல இடங்களில் கொடியேற்றப்பட்டது. அந்த வகையில், பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமர்ஹி மாவட்டத்தில் ராம்நகரில் அபிஷேக் ஜா என்ற நபர், தனியார் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்றுவது வழக்கம். அதன் படி, இந்த ஆண்டும் அபிஷேக் தேசியக் கொடியை ஏற்ற சென்றபோது, இரும்புக் கொடிக் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், அவரை காப்பாற்ற முயன்ற 4 பேர் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அருகிலுள்ளவர்கள் காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்கள் நன்கு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near bihar man died for electric shock on flagpole