பெங்களூர் : வாலிபர் மீது காரை ஏற்ற முயன்ற விவகாரம் - பெண் உள்பட 5 பேர் கைது.! 
                                    
                                    
                                   near banglore five peoples arrested for woman driving car dangerously 
 
                                 
                               
                                
                                      
                                            கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் மரியப்பனபாளையா பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷன். இவர், நேற்று முன்தினம் உல்லால் மெயின் ரோட்டில் காருக்கு வழிவிடாத பிரச்சினையில் பிரியங்கா என்ற பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த பிரியங்கா தர்ஷன் மீது காரை ஏற்ற முயன்றுள்ளார். நொடியில் உஷாரான தர்ஷன் காரின் என்ஜின் மீது படுத்து கொண்டார். இருப்பினும், பிரியங்கா காரை நிறுத்தாமல் என்ஜின் மீது படுத்திருந்த தர்ஷனுடன் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் ஆபத்து விளைவிக்கும் வகையில் காரை ஓட்டி சென்றுள்ளார்.
இந்த நிலையில், பிரியங்காவின் காரை தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து உடைத்தது மட்டுமல்லாமல், பிரியங்காவையும் தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இதைத்தொடர்ந்து, போலீசார் பிரியங்கா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல், பிரியங்காவை தகாத வார்த்தையில் திட்டியதுடன், காரை உடைத்ததாக தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

இதையடுத்து, போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி, நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, பிரியங்கா உள்பட ஐந்து பேரையும் வருகிற 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன் படி, போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       near banglore five peoples arrested for woman driving car dangerously