மதுபோதையில் மயங்கி விழுந்த மணமகன் - அதிர்ச்சியில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் உள்ள நல்பாரி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, மணமக்களை வாழ்த்துவதற்காக உறவினர்களும் வந்து இருந்தனர். 

இதையடுத்து இந்த திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன்பாக மணமகனை மணமேடையில் உட்கார வைத்து திருமண சடங்குகளும் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மணமகன் நடவடிக்கையில் கொஞ்சம் மாற்றங்கள் இருந்துள்ளது.

இதைப்பார்த்த மணமகள் வீட்டினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது அவர் திடீரென மதுபோதையில் மேடையில் அருகில் இருந்தவர் மீது சாய்ந்தது மணமகள் வீட்டாருக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது 

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தி, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மனைகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாவது:- 

"எங்கள் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்தனர். ஆனால், நிலைமை மோசமடைந்ததால், அந்த பெண் திருமணம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தார். மணமகன் குடும்பத்தில் திருமணத்திற்கு வந்தவர்களில் 95 சதவீதம் பேர் மதுபோதையில் இருந்தனர். 

அதனால், நாங்கள் காவ்ன் புர்ஹாவை தொடர்பு கொண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தோம். மாப்பிள்ளையால் காரில் இருந்து கூட இறங்க முடியவில்லை அதை விட அவரது தந்தை அதிக மதுபோதையில் இருந்துள்ளார் என்று அவர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near assam groom fell down on stage with drunk


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->