விண்வெளி சென்றுள்ள இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் குழுவினர்: ஜூலை 14-இல் பூமி திரும்புவார்கள் என நாசா அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 04 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

சுபன்ஷு சுக்லா தலைமையிலான குழுவினர் ஜூலை 14-ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுக்லா தற்போது ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். தனது விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில் அவர் விவசாயியாகவும் மாறியுள்ளார். விண்வெளியில் வெந்தயம், பச்சை பயிறு வளர்த்து போன்றவற்றை வளர்த்து வருகிறார்.

கடந்த ஜூன் 27-ஆம் தேதி முதல் சுக்லா குழுவினர் தங்கள் அறிவியல் ஆய்வுகளைத் தொடங்கி இன்றுடன் 14 நாட்கள் நிறைவடைந்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வதற்கு முன் ஆய்வு காலம் 14 நாட்கள் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், விண்வெளி நிலையத்திலிருந்து பூமி திரும்ப உள்ள வீரர்களை வரவேற்க விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NASA announces that Indian astronaut Subhanshu Shukla crew will return to Earth on July 14th


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->