குஜராத்தில் கோர தாண்டவமாடும் மர்ம காய்ச்சல்!...மொத்த பலி எண்ணிக்கையில் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


அண்மையில் குஜராத் மாநிலத்தில் பெய்த கன மழையால் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில்,  பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக குஜராத்தில் உள்ள கட்ஜ் மாவட்டத்தில் திடீரென்று பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த மர்ம காய்ச்சல் வேகமாக பரவியதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். 


இதையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கட்ச் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 7 குழந்தைகள் என மொத்தம் 15 பேர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி, உயிரிழப்பிற்கான  காரணத்தை கண்டறிய உள்ளதாகவும், இது அறியப்பட்ட வைரசா அல்லது புதியதா என்பதை அறிய முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அமித் அரோரா கூறியுள்ளார். மேலும்,  இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எச்1என்1, பன்றிக்காய்ச்சல், கிரிமியன்-காங்கோ காய்ச்சல், மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவித்தார். 

இதற்கிடையே பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள லக்பத்தில் 22 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் மருத்துவர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious fever is rampant in Gujarat Shocking information on the total number of victims


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->