"மனைவியின் தொடர் தற்கொலை மிரட்டல்" கணவருக்கு விவாகரத்து வழங்கிய மும்பை உயர் நீதிமன்றம்!
Mumbai High Court Divorce wife husband
மனைவி தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி வந்ததைக் காரணம் காட்டி, விவாகரத்து கோரிய கணவருக்குச் சாதகமாக மும்பை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குடும்ப நல நீதிமன்றம் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து, கணவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் தனது மனுவில், 2006-இல் திருமணம் செய்ததாகவும், 2012 முதல் பிரிந்து வாழ்வதாகவும், தனது மனைவி அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி கவுதம் அன்காட் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
நீதிபதிகள் தீர்ப்பு:
தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிந்து வாழ்வதால், இனி அவர்களுக்குள் இணக்கம் ஏற்பட வாய்ப்பில்லை.
"குடும்ப உறவில் ஒரு துணைவரின் தற்கொலை மிரட்டல் என்பது மற்றொருவரை சித்திரவதை செய்வதற்குச் சமம். இதை உச்ச நீதிமன்றமும் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது."
இதுபோன்ற மிரட்டல் மீண்டும் மீண்டும் விடுக்கப்படும்போது, அமைதியான சூழலில் திருமண உறவில் தொடர முடியாது. அத்தகைய உறவைத் தொடர வலியுறுத்துவது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கொடுமையை அனுபவிக்கச் சொல்வது போல் ஆகிவிடும்.
எனவே, இந்த வழக்கில் கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது.
நிவாரணம்:
இறுதித் தீர்வாக, கணவர் தனது மனைவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், இரு வீடுகளின் உரிமையை அந்தப் பெண்ணுக்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
Mumbai High Court Divorce wife husband