பெற்ற தாயின் கொடூரச்செயல்: அழுத பச்சிளம் குழந்தையை வெந்நீரில் தூக்கி போட்டு கொலை: கர்நாடகாவில் பயங்கரம்..! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் பச்சிளம் குழந்தையை வெந்நீரில் போட்டு தாய் கொலை செய்துள்ள சம்வபம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் அருகில் உள்ள நலமங்களா என்ற பகுதியை சார்ந்த ராதா என்ற பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிறந்து 38 நாட்களே ஆனா தனது ஆண் குழந்தையை கொதிக்கும் வெந்நீரில் போட்டு கொலை செய்துள்ளார்.  

இவருக்கு குறை பிரசவதில் குழந்தை பிறந்துள்ளது. அத்துடன் ராதா சில நாட்களாக தனியாக வசித்து வந்துள்ளார். ராதாவின் கணவர் குடிக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ராதா விஸ்வேஷ்புராவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு ராதாவின் குழந்தை அழத் தொடங்கியுள்ளது.

அப்போது குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். ஆனால், குழந்தை  குடிக்காமல் அளித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராதா குழந்தையை ஒரு பாத்திரத்தில் வெந்நீரை காயவைத்து அதில் துக்கி வைத்துள்ளார். இதனால் தீக்காயம் குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பில் காவல்துறையினர் கூறுகையில், ராதா பிரசவத்துக்கு பிறகான மனம் அழுத்ததால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அதன் காரணமாக அவர் இப்படி செய்து இருக்கலாம் என்று கூறுகின்ற நிலையில், ராதா இந்த கொடூர செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother kills crying baby by throwing him into boiling water in Karnataka


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->