ஒரே போன் கால்., 9 லட்சம் காலி.! ஆப்பு வைத்த., ரிமோட் ஆப்.! மக்களே உஷார்.!! - Seithipunal
Seithipunal


பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் வந்த பின்னர், நூதன முறையில் பணம் திருட்டு நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் நாக்பூர் அருகே ஒரே ஒரு போன் அழைப்பு மூலம் 9 லட்சத்தை ஒருவர் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே ஒரே போன்கால் மூலம் ரூ.9 லட்சத்தை அசோக் மேன்வட் என்பவர் இழந்துள்ளார். கோரடி பகுதியில் வசித்து வரும் அசோக் மேன்வட் செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். 

அந்நேரம் அந்த அழைப்பை அசோக்கின் 15 வயது மகன் எடுத்துள்ளார். எதிர்முனையில் பேசிய மர்மநபர் டிஜிட்டர் பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். உங்கள் தந்தையின் செல்போனில் நான் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

அந்த சிறுவனும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். ஆனால் அந்த செயலி வேறொரு இடத்தில் இருந்து செல்போனை இயக்கும் ரிமோட் செயலி ஆகும். இந்த செயலி மூலம் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர் அந்த மர்ம நபர்.

தனது அக்கவுண்டில் பணம் குறைவதை கண்ட அசோக், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

money forgery in online


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->