எதிர்க்கட்சிகள் செய்வது இதனைத்தான்..! பிரதமர் மோடி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த மாதத்தின் 30 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு துவங்கிய நிலையில்., 7 ஆம் தேதியன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. 

3 ஆம் கட்ட தேர்தல் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்., 4 ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசிய சமயத்தில்., 

குடியுரிமை சட்டத்தினை எதிர்த்து போராடுவதற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்கள் தூண்டிவிடும் நிலையில்., இந்தியாவிற்கு தப்பி வந்துள்ள மக்களை காக்கும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச மக்களுக்கு குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றம் செய்தது. 

இந்த சட்டத்தினை காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் எதிர்த்து போராட்டம் செய்து வரும் நிலையில்., பெரும் புயலை கிளம்புகிறது. அதிகளவு வன்முறை சம்பவத்திற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்து வருகிறது. 

இதற்கு முன்னதாக ஆட்சியில் இருந்த எதிர்க்கட்சி மக்களின் துன்பத்தை பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். தங்களது குடும்பத்திற்கு பங்களாவை கட்டி வைத்துள்ளனர். அசாமில் வன்முறையை புறக்கணித்த சகோதர சகோதரிகளுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Modi speech about violence


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->