பெண்ணுடன் பேசியதால் ஆத்திரமடைந்த கும்பல்...! வாலிபரை தாறுமாறாக தாக்கி கொலை...!
mob enraged by conversation woman brutally attacks and kills young man
மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட்டாவாட் குர்த் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான ''கான்'' என்பவர். இவர் ஜாம்னர் நகருக்கு காவல் வேலைக்கான தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காக சென்றுள்ளார். அங்கு விண்ணப்பித்து முடித்தவிட்டு, அருகிலுள்ள கடையில் காபி குடித்தவாறு இளம்பெண் ஒருவருடன் போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அச்சமயம், 10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி தகராறு செய்துள்ளனர். சிறிது நேரத்தில் தகராறு கலவரமாக நிலையில், கானை கொடூரமாக தாக்க முயன்றுள்ளனர்.
தாறுமாறாக தாக்கிய பின்பு , அவர்கள் கான் வசித்து வந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து கட்டை, இரும்பு கம்பியால் பலமாகவும் கொடூரமாகவும் தாக்கியுள்ளனர். மேலும், கானின் குடும்பத்தினர் தடுக்க முயன்றும் பலனில்லாதவாறு தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இறுதியாக கான் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து கானின் உறவினர்கள் புகாரளித்து, அடித்து கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து காவலர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர்.இதற்கு முன்பாக இருந்த பழைய பகையால் கான் அடித்துக் கொள்ளப்பட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.கும்பல் மூலம் ஒருவர் அடித்ததே கொன்ற சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mob enraged by conversation woman brutally attacks and kills young man