ஆசனவாயில் காற்றுப்பம்பை வைத்து நண்பர்கள் செய்த செயல்.! கதறித்துடித்து பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் ரஹ்மத் அலி என்பவர் கடந்த நவம்பர் 11ஆம் தேதி பணிக்கு சென்றுள்ளார். அப்பொழுது தனக்கு கொடுக்கப்பட்ட வேலையான சுத்தம் செய்கின்ற பணியை அவர் செய்து கொண்டு இருந்துள்ளார். 

அவருடன் பணிபுரியும் நபர்கள் ரஹ்மத் அலியை அழைத்து விளையாட்டாக அவரது ஆசனவாயில் காற்று பம்பை வைத்து காற்றை நிரப்பியுள்ளனர். அவர்களிடமிருந்து ரஹ்மத் அலி தப்பிக்க முயன்ற பொழுதும் அவரால் முடியவில்லை
தொடர்ந்து அவரது ஆசன வாயில் காற்று செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் அவரது உடலில் சில மாற்றங்கள் உருவாகி மயங்கி விழுந்துள்ளார். 

இதனால் காற்றை செலுத்திய கயவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காற்றை செலுத்தியதால் கல்லீரல் உட்பட அவருடைய நிறைய உறுப்புகள் சேதமாகி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சுயநினைவின்றி ரஹ்மத் பத்து நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ரஹ்மத் அலியின் குடும்பத்தினர் வழக்குப்பதிவு செய்து ஷேக் சதா கான் என்பவர் மீது புகாரளித்துள்ளனர். மேலும், தொழிற்சாலை நிர்வாகம் எதுவும் தெரிவிக்காமல் இருந்து வருகின்ற நிலையில் ரஹ்மத் அலியின் குடும்பத்தினர் இழப்பீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Men dead in kalkatta who friends did bad


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal