தமிழகத்திற்கு குடுத்த தண்ணீர் திறந்தது போதும்! மேகதாது அணை விவகாரம் எங்களுக்கு சாதகமாக உள்ளது -டி.கே சிவகுமார்!
Mekedatu Dam issue is in our favor TK Sivakumar
காவிரியில் இருந்து தினமும் 51,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இதுவரை 30 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.கே சிவகுமார் தெரிவித்ததாவது,
தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீரை விடுவிப்போம். இந்த ஆண்டு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்காக காவேரி நடுபடுகையில் உள்ள 165 ஏரிகளையும் நிரப்பி கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜூலை 11ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் தமிழகத்துக்கு 20 டிஎம்சி தண்ணீரை விடுவிக்கும்படி காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஒத்தரவிட்டு இருந்தது. கர்நாடகா விவசாயிகளுக்கு போதுமான நீர் இல்லாத காரணத்தினால் தமிழகத்திற்கு எங்களால் தண்ணீர் வழங்க முடியவில்லை.
கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது. வாரணாசியில் கங்கை ஆரத்தி எடுப்பது போல் காவேரி ஆரத்தி எடுப்பது குறித்து யோசித்து வருகிறோம். விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்து செய்திருந்தோம்.
மேகதாது அணை திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இதற்கு காலம்தான் பதில் சொல்லும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகவிற்கு சாதகமான சுழல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Mekedatu Dam issue is in our favor TK Sivakumar