ஆசிரமத்தில் அக்கப்போறு... பலான சிடிக்கள் சிக்கியது.! கைதான சாமியார்.! 
                                    
                                    
                                   mathra predhesh ashramam issue 
 
                                 
                               
                                
                                      
                                            ஆசிரமம் நடத்துகிறேன் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து ஆபாச வேலைகளில் ஈடுபட்டு வந்த போலி சாமியாரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். 
மத்திய பிரதேச மாநிலத்தில் நாக்பூர் மாவட்டத்தில், நந்தியா விஹாரா எனும் கிராமத்தில் தர்மேந்திர தாஸ் என்ற சாமியார் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். பெண்களின் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று கூறியதால் அந்த ஆசிரமத்திற்கு பல பெண்களும் படை எடுத்தனர். 
அந்த சாமியார் அங்கு வந்த பெண்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அத்துடன் அங்கு போதைப்பொருட்கள் புங்குவதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் 2 கிலோ கஞ்சா மற்றும் பல ஆபாச வீடியோ சிடிக்கள் இருப்பதை கண்டறிந்தனர். 
மேலும், பாலியல் சம்பந்தமான பென்டிரைவ், உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன. இதனை தொடர்ந்து, அனைத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த சாமியாரை கைது செய்து, ஆசிரமத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       mathra predhesh ashramam issue