பழைய நினைவில் தாபா ஓனர்., பட்டப்பகலில் காதலியுடன் செய்த காரியம்.! புதுமணப்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


திருமணமான பெண்ணை தனது இச்சைக்கு இணங்க மறுத்த காரணத்தால், அவரை சுட்டு வீழ்த்திவிட்டு தானும், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஹரியானா மாநிலத்தில், குருகிராம் அருகே உள்ள படவுடி கிராமத்தில், ராஜேஷ் என்ற 30 வயது இளைஞர் தாபா ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றன.

இந்த நிலையில் அவருக்கு, 20 வயது பிரியங்கா என்ற திருமணமாகாத பெண்ணுடன் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது. 

சமீபத்தில் பிரியங்காவிற்கு திருமணம் நடைபெற்றது. இதனால் ராஜேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், தனது காதலி இடமே சென்று பேசி விடலாம் என்று எண்ணிய ராஜேஷ் நேராக பிரியங்காவின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துக் கொண்டு தன்னுடைய தாபாவிற்கு சென்றுள்ளார். அங்கே மீண்டும் தன்னுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளுமாறு பிரியங்காவை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், பிரியங்கா தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், எனவே தன்னால் அதனை செய்ய முடியாது என்றும், கூறியிருக்கின்றார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ராஜேஷ் பிரியங்காவை சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Married men was suicide for ex lover


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->