புடவை புடிக்கல..நிறுத்து கல்யாணத்த..! திருமண வீட்டில் கிளம்பிய பூகம்பம்.!  - Seithipunal
Seithipunal


திருமணத்திற்கு மணப்பெண் தேர்வு செய்த புடவை பிடிக்காததால், மணமகன் வீட்டினர் திருமணத்தையே நிறுத்தி இருக்கும் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகாவை சேர்ந்த ரகு குமார் மற்றும் சங்கீதா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தங்களுடைய பெற்றோரிடம் காதலைத் தெரிவித்து அவர்களை சம்மதிக்க வைத்து திருமணத்திற்கு தயாராகி இருக்கின்றனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்த நிலையில் மணப் பெண் தேர்வு செய்த திருமண புடவை தங்களுக்குப் பிடிக்கவில்லை எனவே அதனை மாற்ற வேண்டும் என்று ரகுராமின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இதனை சங்கீதா மற்றும் அவருடைய பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாக இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறி ஒருகட்டத்தில் திருமணமே நிற்கும் அளவிற்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து சங்கீதா மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது போலீசில் மோசடி புகார் கொடுத்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage stopped for saree


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal