ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மெட்ரோவில் வேலை - ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ந்தேதி முன்னாள் ஆயுத படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் படி, இன்று நாடு முழுவதும் ஆயுத்தைப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்தத்தினம், முப்படைகளிலும் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்து, வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவர்களது தேச பணி பாராட்டுக்கு உரியது என்பதை அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. 

இந்த விழாவை முன்னிட்டு, இன்று டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் அனில் சவுகான், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி மற்றும் கடற்படை தலைமை தளபதி ஆர். ஹரி குமார் உள்ளிட்டோர் தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

இதையடுத்து, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்ததாவது, "நம்முடைய ஓய்வு பெற்ற மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களால் நமது நாடு பெருமை அடைகிறது. 

மூத்த ராணுவ வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக, ரெயில்வே, மெட்ரோ மற்றும் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் வேலை வாய்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களுக்கான சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. 

மேலும், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக செலவழித்த தொகையை ஆன்லைன் வழியே கேட்டு பெறுவதற்கான வசதிகளுக்கும், ஒரே நேரத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறும் பாலிகிளினிக்கிற்கான நிதி நிலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manoj pandey allounce job in metro to ex servicemans


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->