மணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிய அரசு! சேர்களை பறக்கவிட்ட  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!  - Seithipunal
Seithipunal


மணிப்பூரில் முதல்வர் பைரோன்சிங் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றது. 

60 எம்.எல்.ஏக்கள் கொண்ட மணிப்பூர் சட்டசபையில் தற்போது  சபாநாயகரையும் சேர்த்து 53 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். கட்சி தாவிய காரணத்தினால் சபாநாயகரால்  4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். பாரதிய ஜனதா கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியையும் ராஜினாமா செய்திருந்தனர். 

53 எம்.எல்.ஏக்கள் இருந்ததில் காங்கிரஸ் கட்சிக்கு 24 எம்.எல்.ஏக்களும் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு சபாநாயகரையும் சேர்த்து 29 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இதில் 18 பேர் பாஜக எம்.எல்.ஏக்கள். என்.பி.பி, என்.பி.எப் கட்சிகளின் தலா 4 எம்.எல்.ஏக்கள், திரிணாமுல், லோக் ஜனசக்தியின் தலா எம்.எல்.ஏ, ஒரு சுயேச்சை எம் எல் ஏ  ஆகியோர் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தருகின்றனர். 

மணிப்பூரை உலுக்கிய போதை பொருள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. இதில் முதல்வர் பைரோன்சிங் பெயரும் அடிபட  காங்கிரஸ் கட்சி சிபிஐ விசாரணை கோரியது. ஆனால் முதல்வர் பைரோன்சிங் இதனை நிராகரித்தார். இதனையடுத்து தான் முதல்வர் பைரோன்சிங் அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் காங்கிரசின் கோரிக்கையை  மணிப்பூர் சட்டசபை செயலாளர் நிராகரித்தார். 

அதேவேளையில் மாநில முதல்வர் பைரோன்சிங் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு அனுமதி கொடுக்கப்பட, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. குரல் வாக்கு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், பாஜக அரசு 28 உறுப்பினர்களுடன் வெற்றிபெற்றது. 

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபைக்கே வரவில்லை.. இதனால் முதல்வர் பைரோன்சிங் எளிதாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். பைரோன்சிங்குக்கு ஆதரவாக 28 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் கிடைத்தன. இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதோடு, சட்டசபையிலே  நாற்காலிகளை பறக்க விட்டனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur CM N Biren Singh wins trust vote


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal